திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA) மற்றும் ஃபேர் டிரேட் இந்தியா சார்பில் தயாரிப்பு கார்பன் தடம் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது.
சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோவன் கூறுகையில்: ஆடை மற்றும் ஜவுளித் துறையில் கார்பன் தடயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் இந்தத் தொழில் சுமார் 10% பங்களிக்கிறது. ஜவுளிக் கழிவுகளை எரிப்பது கார்பன் வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது. இதனால், ஜவுளித் துறையில் கார்பன் தடத்தைக் குறைப்பது மிக முக்கியமானது. எனக் குறிபிட்டார்.
இணைச் செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில்: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தில் தமிழ்நாடு 60% பங்களிக்கிறது. திருப்பூர் அதன் மின்சாரத்தில் 100% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலக்கு 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதாகும். அதை நோக்கி பயணிக்க வேண்டும் எனக் கூறினார்.

ஃபேர்ட்ரேட் இந்தியாவில் ஜவுளி நிலைத்தன்மைக்கான மூத்த திட்டத் தலைவர் செந்தில்நாதன், கிரீன்ஹவுஸ் எரிவாயு, தயாரிப்பு கார்பன் தடம் மற்றும் LCA ஆகியவற்றின் பின்னணியில் உள்ள கருத்துகள், வழிமுறைகளை விளக்கினார். 70க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்துகொண்டனர்.
