கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில், ‘கெப்ஸ் சென்டர் ஃபார் அட்வான்ஸ் பிக்கில் பால்’ உள் விளையாட்டு அரங்கு ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை கெப்ஸ் சென்டரின் நிறுவனர் அன்பு செல்வன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கெப்ஸ் சென்டர் நிறுவனர் டாக்டர் சரண்யா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Pckle ball scaled

இதுகுறித்து கெப்ஸ் சென்டர் நிறுவனர் டாக்டர் சரண்யா கூறுகையில்: ஶ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி வளாகத்தில், சர்வதேச தரத்தில் நான்கு ப்ரீமியம் உள் விளையாட்டு அரங்கை திறந்துள்ளோம்.

கோவையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் பிக்கில் பால் அரங்கை நாங்கள் தான் தொடங்கினோம். 2024ல் ஒரு அரங்கை புதுப்பித்து தொடங்கிய பிறகு, தற்போது பல வீரர்கள் விளையாட வருகின்றனர். தற்போது இந்த விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது.

Pckle ball 3

2032இல் பிக்கில் பால் விளையாட்டு ஒலிம்பிக்கில் இடம்பெறும் என நம்புகிறோம். ஏற்கனவே 75 நாடுகளில் இந்த விளையாட்டு உள்ளது. பள்ளி குழந்தைகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக பள்ளியில் தொடங்கியுள்ளோம். காலை 6 மணிமுதல் 7 மணிவரை, மதியம் 3.30 மணிமுதல் மாலை 5 மணிவரை, மாலை 5 மணிமுதல் 6.30 மணி வரை என மூன்று பிரிவுகளாக இந்த அரங்கு செயல்படும் எனக் கூறினார்.

Pckle ball 4