கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் சார்பில் நோய் எதிர்ப்பு சிகிச்சைக்கான எதிர்காலம் – BiTE மற்றும் கார்-டி சிகிச்சை முறைகள் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கைமெரிக் ஆன்டிஜென் ரிசப்டர் டி-செல் சிகிச்சை, பைஸ்பெசிஃபிக் டி-செல் என்கேஜர் சிகிச்சை போன்ற நோயெதிர்ப்பு சிகிச்சையின் புதிய அணுகுமுறைகள் பற்றி பேசப்பட்டது.

முன்னணி மருத்துவர்கள், உயிர் மருத்துவ விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், மருந்து நிபுணர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்து கொண்டு கார்-டி மற்றும் BiTE சிகிச்சைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், மருத்துவ பரிசோதனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.

கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  டீன் டாக்டர் நிர்மலா, கார்-டி செல் சிகிச்சைக்கு பொது சுகாதாரத்தில் உள்ள சவால்கள், தீர்வுகள் என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் பங்கேற்றார்.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில்,  BiTE மற்றும் கார்-டி சிகிச்சைகள் குறித்த இந்த கருத்தரங்கு புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் அறிவுப் பகிர்வு, ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

நிபுணர்களை ஒன்றிணைத்து, புதுமையான அணுகுமுறைகள் குறித்த விவாதங்களை எளிதாக்குவதன் மூலம், இந்த சவாலான நோயை எதிர்கொள்ளும் நோயாளிகளின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்த முடியும்.  தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கார்-டி சிகிச்சைகள் செய்த ஒரே மருத்துவமனை என்ற பெருமையையும் கே.எம்.சி.ஹெச் பெற்றுள்ளது என தெரிவித்தார்.