கோவை ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவன் வளாகத்தில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியாரின் பக்த பிரஹலாதா, குலசேகரர் கண்ட ராமன், சுந்தர காண்ட சாரம் எனும் தலைப்புகளில் ‘ஹரிகதை’ நிகழ்ச்சி ஞாயிறு வரை நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை அன்று குலசேகரர் கண்ட ராமன் நிகழ்வு நடைபெற்றது. இதில் வயலின் ஹேமலதா, மிருதங்கம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வசித்தனர்.

BVB 1

நிகழ்வில் பாரதீய வித்யா பவன் கோவையின் நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார், பவன் நாட்டிய விழா குழு உறுப்பினர் பிரபாகர் ராவ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.