கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனம் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது. இந்நிறுவனம் சார்பில் இந்தியாவில் திறக்கப்பட்ட 6வது கிளை என்பது பெருமைக்குரியது.

1000 சதுர அடி பரப்பளவில், இந்த புதிய பொட்டிக் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன்முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் நேரடியாக அணிந்து பார்த்து விருப்பமானதை தேர்வு செய்யலாம்.

வாடிக்கையாளர்கள் அமர்ந்து பிடித்தமான, பொருத்தமான வாட்ச் தேர்வு செய்வதற்கு ‘ப்ரீட்லிங் வாட்ச பார்’ என்ற அமைப்பும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய கிளை குறித்து ப்ரீட்லிங் இந்தியா நிர்வாக இயக்குனர் பிரதீப் பானோத்  கூறியதாவது: இந்தியாவில் எங்கள் ரீடெய்ல் பங்குதாரர் ஆன, ஜிம்சன் உடன் இணைந்து புதிய கிளையை திறந்ததில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவன விரிவாக்க திட்டத்தில் இது முக்கியத்துவம் வாய்ந்த தருணம். தென்னிந்தியாவில் கிடைக்கும வரவேற்பு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.

ஜிம்சன் கோவை இயக்குநர் நவாஸ் கூறியதாவது: ப்ரீட்லிங் நிறுவனத்துடன் எங்களது கூட்டுறவை வலுப்படுத்துவதில் பெருமிதம் அடைகிறோம். ஜிம்சன் நோக்கம் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு  ஆடம்பர உயர்த்தர வாட்ச் பிராண்டுகளை அவர்களின் கரங்களில் கொண்டு சேர்பதேயாகும். தென்னிந்தியாவில் உயர்தர வாட்ச்-களுக்கான ஆர்வம் அதிகம்  காணப்படுகிறது. இந்த புதிய கிளை வாட்ச பிரியர்களுக்கு உயர்தர அனுபவத்தை அளிக்கும் என்றார்.