ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கும் பிரம்ம கமலம் பூ, கோவையில் உள்ள ஒரு வீட்டில் பூத்துள்ளது.

‘நிஷாகந்தி’ எனப்படும் ‘பிரம்ம கமலம்’ பூ ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இது சிவபெருமானுக்கு விருப்பமான பூவாகவும், பிரம்மாவிற்கு உகந்த பூவாகவும் பக்தர்களால் கருதப்படுகிறது. மிகுந்த மணம் நிறைந்த இந்த பூ இரவில் பூத்து அதிகாலையில் வாடிவிடும் தன்மை உடையது.

இப்பூவின் தோற்றம் சயன கோலம், பாம்பு படம் எடுத்திருப்பதுபோல இருக்கும். குறிப்பாக ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டும் மலரும். இப்பூக்கள் மலரும் போது ஏற்படும் நறுமணம் அப்பகுதி முழுவதும் வீசும்.

இந்நிலையில், கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள பார்சன் அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் ஷியாம் என்பவரது வீட்டில் பிரம்ம கமலம் செடி வளர்க்கப்பட்டு வருகிறது. இவரது வீட்டில் உள்ள இந்தச் செடியில் நேற்றிரவு ஒரு மலர் பூத்தது. இதனை அப்பகுதியை சேர்ந்த பலரும் வியப்புடன் கண்டு ரசித்தனர்.