சோலை பதிப்பகத்தின் சார்பில் கவிஞர் கா.சி.குமரேசன் எழுதிய ‘ஒரு கூட்டுப்புழுவின் கிரகப்பிரவேசம்’ நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனங்களின் மனித வள மேம்பாட்டு துறை தலைவர் கவிதாசன் கலந்துகொண்டு புத்தகத்தை வெளியிட்டார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் மகாகவி பாரதியார் உயராய்வு, இயக்குநர், பேராசிரியர் சித்ரா முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் சிவகுமார் அன்பழகன் விழா பற்றிய தொகுப்புரையை வாசித்தார். கவிஞர் கா.சி.குமரேசன் ஏற்புரை வழங்கினார்.