கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் ஏ.வி.வி. குழுமத்தின் நிறுவனர் ஏ.வி.வரதராஜன் எழுதிய “கோவை, கொடிசியா, எனது நினைவலைகள்” நூல் வெளியீட்டு விழா ஞாயிறு (ஜூலை 20) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.

நிகழ்விற்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தலைமை தாங்குகிறார். கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2025 தலைவர் ராஜேஷ் முன்னிலை வகிக்கிறார். கொடிசியா முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கையன் நூலை வெளியிட, முதல் பிரதியை கொடிசியா முன்னாள் தலைவர் ஜெகநாதன் பெற்றுக்கொள்கிறார்.

தொடர்ந்து, கொடிசியா முன்னாள் தலைவர் பழனிசாமி நூல் குறித்த அறிமுகத்தை வழங்குகிறார். ஏ.வி.வரதராஜன் ஏற்புரை வழங்குகிறார்.