தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையின் மாநில தலைவர் முகம்மது ஆரீஃப் பிறந்த நாளை முன்னிட்டு, பூ மார்கெட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் உள்ள இரத்த வங்கியில் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிகிழமை (24.10.2025) நடைபெற்றது.
கோவை மாநகர் மாவட்ட சிறுபான்மை துறை சார்பாக நடைபெற்ற இதில், அப்துல்லா அசார் தலைமை தாங்கினார்.
கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார், வடக்கு மாவட்ட தலைவர் ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொண்டு இரத்த தான முகாமை துவக்கி வைத்தனர்.
இதில் காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில தலைவர் முகம்மது ஆரீஃபிற்கு பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை மாநில துணை தலைவர் பஷீர், ஒருங்கிணைப்பாளர் ஹாரீஸ், சிறுபான்மை துறை தெற்கு மாவட்ட தலைவர் ஹாரூன், வடக்கு மாவட்ட தலைவர் தாவூத் அலி, குறிச்சி சர்க்கிள் தலைவர் இஸ்மாயில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
