இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது.  முகாமினை நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞர் செஞ்சிலுவை சங்கம், மற்றும் லியோ கிளப் உடன் இந்துஸ்தான் மருத்துவமனையும் இணைந்து கல்லூரி வளாகத்தில்  நடத்தினர்.

நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் பொன்னுச்சாமி கலந்து கொண்டு உயிர் காக்கும் ரத்த தானத்தின் அவசியத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். முகாமில் 50 க்கும் மேற்பட்டவர்கள் ரத்த தானம் செய்தனர். அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.