பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனை சந்தித்து பைக் டாக்ஸி சங்கம் மனு அளித்தது.

கோவை மாவட்டத்தில் “ரேபிட்டோ செயலி” மூலம் பைக் டாக்ஸி ஓட்டி வரும் நபர்களை ரயில் நிலையம்,  காந்திபுரம்,  குனியமுத்தூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும்,  வாடிக்கையாளர்களையும் அச்சுறுத்தி வரும் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க கோரி பைக் டாக்ஸி அசோசியேஷன் அமைப்பை சேர்ந்த நபர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இது குறித்து, பைக் டாக்ஸி சங்கம் சார்பில் கூறுகையில்,  இந்த முற்போக்கான நடவடிக்கையானது, பைக் டாக்ஸி ஓட்டுநர்களின் நலன் மற்றும் பயணப் பகிர்வு பொருளாதாரத்திற்கான மாநிலத்தின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகின்ற வகையில் பைக் டாக்சி ஓட்டுநர்களுக்கு ஒரு நிலையான  பாதுகாப்பு ஈட்டும் சூழலை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பயணப் பகிர்வு தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதில் இடையறாது உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஆன்லைன் பணி சார்ந்த ஊழியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கு ஆதரவு அளித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் சிவசங்கர் ஆகியோருக்கு பைக் டாக்ஸி சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.