ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ் மன்றம் மற்றும் வாசகர் மன்றம் சார்பில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104வது ஆண்டு நினைவு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது. கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார் தலைமை தாங்கி, பாரதியாரின் படத்திற்கு மலா் தூவி மரியாதை செய்தார்.

மாணவர்கள் பாரதியாரின் பாடல்கள், கவிதைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர். நிகழ்வினைத் தமிழ்த்துறைத் தலைவர் விஸ்வநாதன், தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் கோபிகா, வாசகர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரபாகர், மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்தனர்.