கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் மனித நேய சமத்துவ பொங்கல் விழா பீளமேடு அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நடைபெற்றது.
பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கெளரி சங்கர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ இஸ்மாயில் பாஷா,பாத்திமா, முஹம்மது அஷ்ரால்ஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து சிறப்பித்தார்கள்.
அரவணைக்கும் அன்பு இல்ல பங்கு தந்தை பிரின்ஸ் குழந்தைகள் முதியவர்களுக்குண்டான விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள்.சமூக சேவகர் பாலசுப்பிரமணியம் , ஜசக் மதன் விளையாட்டு போட்டிகளிலில் வெற்றி பெற்ற மாணவர்கள் முதியவர்கள் -மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்பித்தார்கள். கலை நிகழ்ச்சிகளை சமூக சேவகி திவ்யா சக்திவேல் துவக்கி வைத்து சிறப்பித்தார்கள்.மேலும் இவ்விழாவில் பாரத மாதா நிர்வாகிகள் தமிழரசன்,சக்திவேல், கன்ஷிகா, மோஹிதா ஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும்,கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.