கோவை நேரு கல்வி குழுமம் சார்பில் “சிறந்த ஆசிரியர் விருது – 2026” வழங்கும் விழா நடைபெற்றது.

இக்குழுமத்தின் தலைவர் கிருஷ்ணதாஸ் தலைமையின் கீழ் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. செயலாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார்.

நேரு பள்ளியின் தாளாளர் சைதன்யா கிருஷ்ணகுமார், நேரு கல்விக் குழுமத்தின் செயல் இயக்குநர் நாகராஜா, பி.கே தாஸ் பல்கலைக்கழகம் பதிவாளர் அனிருதன், நேரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் சிவராஜா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Nrhru 2 scaled

நிகழ்வில், நாஸ்காம் நிறுவனத்தின் இயக்குனரும், மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனருமான   உதயசங்கர், பிருந்தாவன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் வசந்தராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இவ்வாண்டு மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 50 ஆசிரியர்கள் சிறந்த ஆசிரியர் விருதும்,  மூன்று முதல்வர்கள் சிறந்த முதல்வர் விருதும் பெற்றனர். பி.எஸ்.ஜி. பொது பள்ளியின் முதல்வர் கிரிஷ் ஈஸ்வரன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.