கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் முகாம் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 22 முதல் 26 வரை நடைபெற உள்ளது.

சாலையோர வியாபாரிகள் புதிதாக சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் ரூ.15,000 பெறவும், ஏற்கனவே வங்கி கடனுக்கு விண்ணப்பித்து கடன் கிடைக்காத  வியாபாரிகளும் இதில் பங்கேற்கலாம்.

வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை, மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் இம்முகாமில் கலந்துகொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.