டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், தணிக்கையாளர் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் – தெற்கு இந்திய பிராந்திய கவுன்சில், கோவை கிளை மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பட்டய கணக்காளர்கள் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்டது.
மாநாட்டில் தணிக்கைத் துறையில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், ஏஐ அடிப்படையிலான கருவிகள், அடுத்த தலைமுறை தணிக்கையாளர்களுக்கான திறன்கள் மற்றும் ஜிஎஸ்டி சான்றளிக்கப்பட்ட கணக்காய்வாளர்களின் பங்கு குறித்து பேசப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கே.எம்.சி.ஹெச், டாக்டர் என்.ஜி.பி. கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் சரவணன் வரவேற்புரை வழங்கினார்.
தணிக்கையாளர்கள் ராமசாமி, சூர்வஜித் கிருஷ்ணன், கோபாலகிருஷ்ண மகேஷ், விஷால் ஜெயின், லக்ஷ்மி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் வணிகவியல் துறை மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
