வீடில்லாத ஏழை மக்களின் கோரிக்கை நிறைவேற்ற கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனின்ஸ்ட் மற்றும் வீடற்றோர் மக்கள் இயக்கம். சி.பி.ஐ-எம்.எல் வடவள்ளி பகுதி பொறுப்பாளர் சிவா முன்னிலையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், வீடற்றோர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணவேணி, சி.பி.ஐ-எம்.எல் கோவை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் எ.ஐ.சி.சி.டி.யு தூய்மை பணியாளர் சங்கம் மாவட்ட தலைவர் சந்தானம் மற்றும் கட்சி உறுப்பினர் பலர் கலந்துக்கொண்டனர்.