பிப்ரவரி 10ம் தேதி போத்தனூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் மெமு ரயில் சேவை மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் மெமு ரயில் சேவை ஆகியவை ரத்தாகிறது என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மாலை 3.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (வ.எண்.66616), மற்றும் நாளை மாலை 4.45 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் மேட்டுப்பாளையம் – கோவை மெமு ரயில் (வ.எண்.66617) ரத்தாகின்றன.
வடகோவை ரயில் நிலையத்தில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிகள் மற்றும் பிற பொறியியல் பணிகள் காரணமாக இந்த ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்தாகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.
