ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “செயற்கை நுண்ணறிவு மற்றும் மனித நடத்தையின் எதிர்காலம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் மாநாடு நடைபெற்றது. நிகழ்வை கல்லூரியின் முதல்வர் பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மனநல சமூகப் பணி இணைப் பேராசிரியர் பழனிச்சாமி, “அனைவருக்கும் மனநலம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பைபோலார் ஃபேக்டரியில் உத்தி, அறிவியல் மற்றும் கூட்டாண்மையின் தலைவர் விவேக் மனோகரன்  “சுகாதாரப் பராமரிப்பில் ஏஐ” என்ற தலைப்பில் பேசினார். அமிர்தா விஸ்வ வித்யாபீடத்தின் பொறியியல் பள்ளியின் கலாச்சார கல்வி உதவிப் பேராசிரியர் ஸ்ரீபாத் காலிகி, “உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் ஏஐ” என்ற தலைப்பில் பேசினார்.

சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம், ஹைதராபாத் அரோரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அகாடமி, ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீ நாராயண குரு கல்லூரி போன்ற இந்தியாவின் பல்வேறு கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பித்தனர்.