கோவை மாநகரின் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஐ.டி.ஐ. வளாகம் அருகே அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் வரும் வெள்ளி (20.2.2026) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

வரும் வெள்ளி காலை துவங்கும் இந்த முகாம் மதியம் 2 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப பங்கேற்கின்றன.

இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.tnprivatejobs.tn.gov.in எனும் அரசு இணையத்தளம் மூலம் முன்பதிவு செய்து கொண்டு வெள்ளி அன்று  காலை 10 மணிக்கு தங்கள் சுயவிவரம் மற்றும் முக்கிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு – 0422-2642388 எனும் எண்ணை அழைக்கவும். இந்த முகாமில் பங்கேற்க கட்டணம் எதுவும் கிடையாது.