தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தொடர்ந்து கடந்த 11 ஆண்டுகளாக, அதிக ரத்ததானம் செய்த, ‘தளபதி ரத்ததான இயக்கம்’ கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்களுக்கு,கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டீன் டாக்டர்.நிர்மலா, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.