இந்தியக் கட்டணக் கணக்காளர்கள் கழகத்தின் தலைவராக உள்ள ஸ்ரீனிவாசப் பிரசாத்க்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கட்டணக் கணக்காளர்கள் தொடர்பாக மாணவர்களுக்கு உள்ள வேலைவாய்ப்புகள், படிப்புகள் பற்றி எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குனர் சேகர் கலந்துகொண்டு வாழ்த்தினார்.

இதில் இந்தியக் கட்டணக் கணக்காளர்கள் கழகம் கோயமுத்தூர் கிளை தலைவர் மாதேஸ்வரன், அதன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .