கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் வகையில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு, சுமார் 503.67 கிமீட்டர் நீளத்திற்கு சாலைகள் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

இரண்டாம் கட்டமாக 1847 எண்ணிக்கையிலான சாலைகள், 254.54 கிமீட்டர் நீளத்திற்கு ரூ.106.14 கோடிக்கு தார்சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகளை புதுப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 164 எண்ணிக்கையிலான சாலைகள் 25.14 கிமீட்டர் நீளத்திற்கும் முடிக்கப்பட்டு மீதமுள்ள சாலைப்பணிகள் நடைபெற்று வருகிறது.

மூன்றாம் கட்டமாக 24.10 கிமீ நீளத்திற்கு தார்சாலைகள் புதுப்பிக்க ரூ.12 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நான்காம் கட்டமாக 9.35 கிமீ நீளத்திற்கு தார்சாலைகள் புதுப்பிக்க ரூ.4.95 கோடி மதிப்பீட்டில் பணிகள் எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் 3456 எண்ணிக்கையிலான தார் சாலைகள், 503.67 கி.மீட்டர் நீளத்திற்கு புதுப்பிக்கும் பணிகள் முழுமையாக நிறைவுபெற்றுள்ளது.

அதேபோன்று, ரூ.123 கோடி மதிப்பீட்டில் 287.99 கி.மீட்டர் நீளத்திற்கு 2084 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், ஐந்து மண்டலங்களுக்குட்பட்ட வார்டு பகுதிகளில் ரூ.10.86 கோடி மதிப்பீட்டில் சேதமடைந்த கான்கிரீட் சாலைகளும் விரைவில் சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து சாலை சீரமைக்கும் பணிகளும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விரைவாக முடிக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர்  சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.