கார்மல் கார்டன் பதின்மப் பள்ளியின் வருடாந்திர விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை (22.08.2025) நடைபெற்றது.

விழாவின் ஒரு பகுதியாக மாணவர்கள் கராத்தே நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவர்களின் சாகசங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மறைமாவட்ட மேதகு ஆயர் தாமஸ் அக்குவினாஸ், முதன்மைக் குரு பேரருட் ஜான் ஜோசப் தானிஸ் அடிகளார் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக 4வது படை அணியின் துணை தளபதி மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தர் ராஜ், பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் ஆரோக்கிய ததேயூஸ், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.


