கே.ஜி. மருத்துவமனையின் ஆண்டு விளையாட்டு தின விழா 2024 கோவை சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல். வளாகத்தில் நடந்தது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் Dr. பக்தவத்சலம், காவல் துணை ஆணையாளர் சரவணகுமார், நிர்வாக அறங்காவலர் Dr. அசோக் பக்தவத்சலம் ஆகியோர் போட்டியைத் துவக்கி வைத்தனர். மேலும், நிகழ்வில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகட்க்கு மரியாதை செலுத்தி பாராட்டு விழாவும் நடந்தது.