ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 30வது ஆண்டு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக சைட் பிளானிங் ஆல்ஷ்டாம் டிரான்ஸ்போர்ட் இந்தியா லிமிடெட் தலைவர் கவுசிக்  குமார் கலந்துகொண்டு பேசுகையில்: தற்போதைய தொழில்புரட்சி யுகத்தில் நிறுவனங்கள் செயல்திறனை முதன்மையாக கொண்டு செயல்படுகிறது. இச்சூழலில் மாணவர்கள் மிக நேர்த்தியாக தங்களை சூழலுக்கு ஏற்றவாறு தயார்படுத்தி கொள்வதுடன் மிக துல்லியமாக தங்கள் தொழிநுட்ப அறிவை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

பரிசளிப்பு விழாவில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் கல்லூரியின் சிறந்த மாணவராக சிவில் இன்ஜினியரிங் துறை மாணவர் தர்ஷன் தேர்ந்தெடுக்கப்பட்டு, வி.ராஜய லட்சுமி நினைவு பரிசு, ரூபாய் நான்காயிரம் பரிசுத்தொகையுடன், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கல்லூரியின் ஒவ்வொரு துறையிலும் சிறப்பிடம் பெற்றவர்களில் இயந்திரவியல் துறையில் பிரவீன்,  ஆட்டோமொபைல் துறையில் ரிஷாத், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் ஹாரூன்,   எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறையில் யஸ்வந்த், கணிப்பொறி துறையில் விஷால் மற்றும் கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன் அண்ட் நெட்வொர்க்கிங் துறையில் ஜெயக்கண்ணன் ஆகியோருக்கு பரிசுத்தொகை ரூபாய் இரண்டாயிரம், கேடயம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் சார்பாக இக்கல்வியாண்டில் மாவட்ட, மாநில அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற சிறந்த விளையாட்டு மாணவராக இயந்திரவியல் துறை மாணவர் சிரஞ்ஜன், சிறந்த விளையாட்டு மாணவியாக கணிப்பொறி துறை மாணவி ஹர்ஷிதாவும் தேர்தெடுக்கப்பட்டு சான்றிதழ், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர்.