ஸ்ரீ ராமகிருஷ்ணா இயன்முறை மருத்துவக் கல்லூரியில் “குருக்ஷேத்ரா 2025” என்ற தலைப்பில் ஆண்டு விழா நடைபெற்றது.

விழாவில், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் பேசுகையில், மாணவர்கள் சிறந்து விளங்கவும், கருணையுள்ள மருத்துவ சேவையின் மூலம் சமூகத்திற்குப் பங்காற்றவும் ஊக்கப்படுத்தினார்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் இயன்முறை மருத்துவர் மோகனகிருஷ்ணன் ஜெகதேவன் கலந்துகொண்டு பேசுகையில்: நரம்பியல் மறுவாழ்வு  பல்துறை கவனிப்பு மற்றும் நோயாளியை மையமாகக் கொண்ட சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்து பேசினார்.

தொடர்ந்து கல்வி, விளையாட்டு மற்றும் இதர சாராத செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.