பண்டிகை காலங்களில் பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், கோவை மற்றும் தன்பாத், போத்தனுார் மற்றும் பரூணி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: கோவை – தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (06063) செப்டம்பர் 5 முதல் நவம்பர் 28 வரை வெள்ளிக்கிழமைகளில் காலை 11.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு தன்பாத்தைச் சென்றடையும்.

தன்பாத் – கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06064) செப்டம்பர் 8 முதல் டிசம்பர் 1 வரை திங்கள்கிழமைகளில் காலை 6 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமைகளில் அதிகாலை 3.45 மணிக்கு கோவை சென்றடையும்.

இந்த ரயில்கள் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லூர், ஓங்கோல் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

அதேபோல  போத்தனுார் – பரூணி வாராந்திர சிறப்பு ரயில் (06055) செப்டம்பர் 6 முதல் நவம்பர் 29 வரை சனிக்கிழமைகளில் காலை 11:50 மணிக்கு போத்தனுாரில் இருந்து புறப்பட்டு திங்கள்கிழமைகளில் மதியம், 2:30 மணிக்கு பரூணி சென்றடையும். .

மறுமார்க்கத்தில் பரூணி – போத்தனுார் வாராந்திர சிறப்பு ரயில் (06056) செப்டம்பர் 9 முதல் டிசம்பர் 2 வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11:45 மணிக்கு பரூணியில் இருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமைகளில் மாலை 3:45 மணிக்கு போத்தனுார் வந்தடையும்.

இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, கூடுர், நெல்லூர், ஓங்கல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.