ராயல்கேர் மருத்துவமனை மற்றும் மஸ்குலோஸ்கெலிட்டல் அல்ட்ராசவுண்ட் சொசைட்டியுடன் (Musculoskeletal Ultrasound Society)இணைந்து Ankle Hands-on எனும் கணுக்கால் தொடர்பான பயிற்சி கருத்தரங்கத்தை நடத்தியது.
டாக்டர் பிபின் ஷா மற்றும் டாக்டர் ராஜஸ் சௌபால் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த பயிலரங்கில், சேலம், திருப்பூர், பாலக்காடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 20 பயிற்சி மற்றும் இளைய கதிரியக்க மருத்துவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்
சாதாரண, சோனோ உடற்கூறியல், கணுக்கால் காயங்கள், நோயியல் பற்றின நேரடி விளக்கக்காட்சி போன்றவை காலை அமர்வில் நடைபெற்றது. மதியம் அமர்வில் 3 மணிநேரம் தனிப்பட்ட பயிற்சிகள் பற்றிய பிரத்யேக விரிவுரைகள் நடந்தன.
ராயல்கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.க .மாதேஸ்வரன் கூறுகையில் ” தசைக்கூட்டு கதிரியக்கத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த, இனி வரும் மாதங்களில் இளைய கதிரியக்க வல்லுநர்களின் நலனுக்காக இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இந்நிகழ்ச்சியை ராயல்கேர் மருத்துவமனையின் கதிரியக்க மருத்துவர் செந்தில்குமார் ஏற்பாடு செய்தார்.