கோவை நல்லம்பாளையத்தில் உள்ள அமிர்தா வித்யாலயம் பள்ளியின் 25 ஆண்டுகால கல்விச் சிறப்பைக் கொண்டாடும் வகையில் உலக சாதனை விழா நடத்தப்பட்டது. கலை, கைவினை, கல்வி, நடனம், விளையாட்டு, சுற்றுச்சூழல், நிலைத்தன்மை, நினைவாற்றல், மனத் திறன், இலக்கியம், மொழி, ஆன்மீகம், கலாச்சார ஆகிய துறைகளில் 27 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது.
ஏப்ரல் 3 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விழாவில், ப்ரீ-கேஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான 3,100 மாணவர்களும், 150 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பங்கேற்றனர். ஆறு நாட்களுக்குள் 27 உலக சாதனைகளை படைக்கும் உலகின் முதல் பள்ளியாக இது திகழ்வதாகவும், 27 உலக சாதனைகளை படைக்கும் நோக்கில் இந்த சாதனை படைக்கப்பட்டதாக அமிர்தா வித்யாலயம் தெரிவித்துள்ளது.
3 நாடுகள் மற்றும் இந்தியாவின் 7 வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 27 நடுவர்களின் மேற்பார்வையின் கீழ், இந்த பதிவுகள் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றால் சான்றளிக்கப்பட்டன. நிகழ்வுக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் அமிர்தபுரி பொதுச் செயலாளர் சம்பூஜ்ய சுவாமி பூர்ணாமிரிதானந்த புரி தலைமை தாங்கினார்.
முக்கிய விருந்தினர்களாக, அமெரிக்கா எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் எல்எல்சி தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரபிஹ் பால்பாகி, சிங்கப்பூர் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மேலாண்மை குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி லாவ் தியென் போ, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலகளாவிய தூதர் மற்றும் நடுவர் டாக்டர் தூரா அல் மெர்ஹாபி, எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் தூதர் மற்றும் மூத்த நடுவர் அமீத் ஹிங்கோரானி, ஆசிய ரெக்கார்ட்ஸ் அகாடமி தூதர் மற்றும் மூத்த நடுவர் செந்தில் குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மூத்த ரெக்கார்ட்ஸ் மேலாளர் மற்றும் முன்னாள் இணை ஆசிரியர் ஜெகநாதன், மரகதம், ரெக்கார்ட்ஸ் மேலாளர், தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் முரளிதரன், கல்வி அலுவலர் அமிர்தா வித்யாலயம் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி), நந்தகோபால் மேலாளர் பொது நிர்வாகம், அமிர்த விஷ்வ வித்யாபீடம், ஜெயஜோதி, முதல்வர், அமிர்தா வித்யாலயம், நல்லாம்பாளையம், பத்மஜா, கல்வி ஒருங்கிணைப்பாளர் சுதா, தலைமையாசிரியை ஆகியோர் பங்கேற்றனர்.