தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நெல்லிக்காயிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மார்ச் 17, 18 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வழங்கப்படுகிறது.
பயிற்சி வகுப்பு அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறும்.
நெல்லி பழரச பானம், தயார் நிலை பானம், நெல்லி ஜாம், தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல் போன்ற உணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் பயிற்சி முதல் நாளன்று ரூ.1,770 செலுத்த வேண்டும்.
