கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம், கல்லூரியின் செயலர் வனிதா, தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் குமார் ராஜேந்திரன், முதல்வர் ரத்தினமாலா, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் புவியரசன், பொருளாளர் சந்தோஷ் குமார், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

முன்னாள் மாணவர் சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியேற்றனர். சிறப்பு நிகழ்வாக பின்னணிப் பாடகர்களான அரவிந்த் சீனிவாஸ், ரேஷ்மா ஷியாம் இன்னிசையால் அனைவரையும் மகிழ்வித்தனர். நிகழ்வில் 3000க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.