கோவையில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலையில், சூலூர் வடக்கு ஒன்றிய பாஜக பொருளாளர் சதீஷ்குமார், தேமுதிக மாவட்ட மகளிரணியை சேர்ந்த பிரேமலதா மற்றும் அதிமுக, த.வெ.க, எம்.ஜே.கே கட்சியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார்.
நிகழ்வில், தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் ரவி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ரகு துரைராஜ், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
