ஏழை குழந்தைகளுக்கு பெரிய கனவுகளை உருவாக்க உதவும் நோக்கில், ரவுண்ட் டேபிள் இந்தியா மற்றும் கோவை ஜெம் மருத்துவமனை இணைந்து 25 குழந்தைகளை கோவை டு சென்னை விமானப் பயணத்துக்கு அழைத்துச் சென்றது. சென்னை கோளரங்கம் மற்றும் அக்குவாரியத்தை பார்வையிடும் அனுபவத்தை வழங்கும் விதமாக, ‘பிளைட் ஆப் பேண்டஸி’ திட்டத்தின் கீழ் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

கோவை, திருப்பூர், சென்னை மாவட்டங்களில் உள்ள ரவுண்ட் டேபிள் அமைப்புகள் இணைந்து செயல்பட்ட இந்த முயற்சிக்கு, கோவை ஜெம் மருத்துவமனை முழுமையான ஆதரவு வழங்கியது. ‘குழந்தைகள் பெரிய கனவுகள் காண வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என திட்ட கன்வீனர் மோகன்ராஜ் தெரிவித்தார். ‘இந்த அனுபவம் அவர்களுக்கான தன்னம்பிக்கையை வளர்க்கும்’ என ரவுண்ட் டேபிள் ஏரியா தலைவர் ராகுலன் சேகர் கூறினார்.

மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரவீன் ராஜ், ‘இது போன்ற அனுபவங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஊக்கமாக அமையும்’ என்று தெரிவித்தார்.