பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 3242 C மாவட்டத்தின் கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கலாம் மக்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய முன்னாள் குடியரசு  தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா, கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

விழாவில் ஆயிரம் மாணவர்களுக்கு கலாம் குறித்த சிறப்புக் கட்டுரை அடங்கிய மலர் வழங்கப்பட்டது. கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கு கலாம் நினைவு விருது வழங்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கலாம் பற்றிய புத்தகம் வழங்கப்பட்டது.

காளப்பட்டி தொடக்கப்பள்ளி, நேரு நகர் நடுநிலைப்பள்ளி, வீரியம் பாளையம் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கலாம் சிறப்பு கட்டுரை அடங்கிய மலர் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக எட்டாவது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமார், இரண்டாம் துணை ஆளுநர் வழக்கறிஞர் சூரி நந்தகோபால், ஆகியோர் இணைந்து வழங்கினர்.

மாவட்டத் தலைவர் ஹரிஷ் பாஸ்கர், ஜி எஸ் டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில்குமார், வட்டாரத் தலைவர் சுப்பு செந்தில்குமார்,  முன்னாள் கவுன்சிலர் மோகன் ரங்கநாதன், முன்னாள் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் தலைவர் நந்தகுமார், தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், லயன் கோவிந்தராஜ், இன்ஜினியர் கார்த்திக், தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் தேஜஸ்வினி, பொருளாளர் தாமரை செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.