சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், குமரகுரு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, ‘வியோம்’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை வரும் டிசம்பர் 28ம் தேதி சரவணம்பட்டி, குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் மாலை 6 மணியளவில் நடத்துகிறது.

ரேஸ்கோர்ஸ் குமரகுரு சிட்டி செண்டரில் இதுகுறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிவாஞ்சலியின் இணைச் செயலாளர்கள் பிரகாஷ், காயத்திரி பிரகாஷ் ஆகியோர் கூறியதாவது: இந்த இசை நிகழ்ச்சியில் பாடகர்கள் மற்றும் வீணை, வயலின், கிட்டார், புல்லாங்குழல், கீபோர்ட் உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகள், தாள வாத்தியங்கள் இடம்பெறுகின்றன. மொத்தம் 60 கலைஞர்கள் கொண்ட குழு பங்கேற்கிறது.

சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் குமரகுரு நிறுவனங்கள் இணைந்து வழங்கும் நான்காவது பிரம்மாண்ட மேடை நிகழ்ச்சி இதுவாகும். இதற்கு முன் ஜாலம், சோல், அஸ்தித்வா ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இசை நிகழ்ச்சி டிக்கெட்டுகளுக்கு நிரந்தர விலை நிர்ணயிக்கப்படவில்லை. பார்வையாளர்கள் தங்களால் இயன்றதும், மனம் விரும்பும் அளவிலும் நன்கொடை வழங்கலாம்.

VYom 2

வடவள்ளியில் உள்ள சிவாஞ்சலி டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் கல்லூரி சாலையில் உள்ள அன்னலட்சுமி உணவக கிளைகள் மற்றும் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இணையதளத்தில் பாஸ்கள் கிடைக்கும் எனத் தெரிவித்தனர்.