அந்தமானிலுள்ள அந்தமான் தமிழர் சங்கத்தில் செவ்வியல் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது.

தமிழ்த்துறையின் தலைவர் மகேஸ்வரி வாழ்த்துரை வழங்கினார். ஊடகங்களால் சமுதாயத்திற்கு வளர்ச்சியே / வீழ்ச்சியே  என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. ஊடகங்களைப் பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நன்மையே எனும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

செம்புலம் இதழ் வெளியீடு நடைபெற்றது. அந்தமான் தமிழர் சங்கத்தலைவர் கோபால் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டனர்.

ஸ்ரீ விஜயபுரத்தில் ஜே.என்.ஆர்.எம் அரசு கல்லூரியில் தமிழிலக்கியங்களில் அறிவியல் எனும் பொருண்மையில் பன்னாட்டு மாநாடு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பியர்ள் தேவதாஸ் தலைமையுரை வழங்கினார்.

இதில் 30 தமிழ் மற்றும் 23 ஆங்கிலக் கட்டுரைகள் அடங்கிய 368 பக்கங்களைக் கொண்ட ஆய்வுக்கோவையினைக் கல்லூரியின் முதல்வர் வெளியிட்டார்.

Nirmala 1

மாநாட்டினைச் செம்மூதாய்ப் பதிப்பகம், கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி, ஜே.என்.ஆர். எம். அரசு கல்லூரி, அந்தமான் தமிழர் சங்கம், அந்தமான் இலக்கிய மன்றம், மலேசிய தமிழாராய்ச்சிக்கழகம், பிரான்சு வள்ளலார் சன்மார்க்க சங்கம், சென்னை பல்கலைக்கழகத் தமிழ்  மேம்பாட்டுச் சங்கப் பலகை,

சிங்கப்பூர் தமிழ் இலக்கியக்கழகம், சிட்னி தமிழ் இலக்கிய மன்றம், யாழ்ப்பாண முத்தமிழ்ச்சங்கம், கொரிய தமிழ்ச்சங்கம் ஆகிய பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தின. நிர்மலா மகளிர் கல்லூரியிலிருந்து எட்டு ஆசிரியர்களும், 6  மாணவியரும் அந்தமானுக்கு நேரில் வருகை தந்தனர்.