சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, வங்கியின் கோவை பிரிவு சார்பில் வாடிக்கையாளர்களை கௌரவித்தல் மற்றும் மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் 114-வது நிறுவன தின விழா கொண்டாடப்பட்டது.
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் கோவை பிராந்திய அலுவலகத்தில் 114-வது நிறுவன தின விழா கடந்த 21.12.2024 அன்று கொண்டாடப்பட்டது. வங்கியின் மீதுள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையின் காரணமாக பல வருடங்களாக வங்கி கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும், டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து வங்கி ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.