சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி  மகாதேவன், நீதிபதி  முகமது சாஜுக் அவர்களின் தலைமையில் அமர்ந்த இந்த டிவிஷன் பென்ச் OS0277 to 281/2019  என்ற 20.09.2023 தேதி உத்தரவில்  நீதிபதி ராஜன் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழுவை நியமித்துள்ளது. அந்த நிர்வாக குழு 20.09.2023 முதல் தேர்ந்தெடுத்த அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து  ராஜ் முன்னாள் பதிவாளர்/ விஜிலென்ஸ் உயர்நீதிமன்றம்,சென்னை மற்றும் மாவட்ட நீதிபதி (ஓய்வு)  தேர்தல் அதிகாரியாக நியமித்துள்ளது.

கோயமுத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீ ஆர்வி ஹோட்டலில் மாவட்ட நீதிபதி . ராஜ் (ஓய்வு) கோவை மாவட்ட கால்பந்து சங்க உறுப்பினர்கள் கூட்டத்தை அண்மையில் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில் தேர்தல் நடத்தும் செயல்முறைகள் குறித்து விவாதித்து 05.01.2025 காலை 10:30 மணிக்கு ஆபீஸ் சர்ஸ் கிளப் வா .உ. சி பூங்கா கோயம்புத்தூரில் தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளார். அதன்படி வாக்களிக்கும் உரிமையுடன் கூடிய 35 உறுப்பினர்களுக்கு தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளார். அதன்படி அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர்கள்/ பிரதிநிதிகளின் வாக்களிக்கும் வேட்பு மனு 20.12.2024 மாலை 6:00 மணிக்கு முன்பு சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடுபவர்களின் வேட்பு மனுவை சீலிடப்பட்ட கவரில் வைத்து 21.12.2024 மாலை 6:00 மணிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். 22.12.2024 காலை 10:30 மணிக்கு போட்டியிடுபவர்களின் முன்னிலையில் வேட்பு மனுக்கள் ஆய்வு செய்யப்படும். பிற்பகல் 12.30  மணிக்கு வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படும். தேர்தல் அதிகாரிக்கு உதவியாக 1) வழக்கறிஞர் கேப்டன் ரா.சஞ்சீவ் குமார் , வழக்கறிஞர்  பி .முத்துக்குமார், ஆகிய இரண்டு உதவி தேர்தல் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.05.01.2025 பிற்பகல் 1:30 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.