இந்தியாவில் முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் எண்ணை வாங்கியதில் இருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதை புதுப்பிக்க வேண்டும் என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை, மத்திய அரசு மேலும் நீட்டிப்பு செய்துள்ளது. முன்னதாக, பழைய ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க டிசம்பர் 14, 2024 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், செய்யப்படும் ஒவ்வொரு அப்டேட்டுகளுக்கும் ரூ.50 செலுத்த வேண்டுமெனக் கூறப்பட்டிருந்தது.
இதனிடையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த காலக்கெடு மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது மத்திய அரசு. அதன்படி 14 ஜூன் 2025 வரை ஆதார் விவரங்களை இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.