கலாம் பர்னிச்சர் மற்றும்  ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில்’ கலாம் விருது 2024′ வழங்கும் விழா நடைபெற்றது.

சமூக அக்கறையோடு பணிபுரியும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், இளம் சாதனையாளர்கள்,  சமூக சேவகர்கள், கலைத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் போன்றவர்களின் சேவையை பாராட்டி இவ்விழா நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக  கே.ஜி. மருத்துவமனையின் தலைவர்  டாக்டர் ஜி பக்தவச்சலம் , இரத்தினம் கல்விக் குழுமத்தின் இயக்குநர் சீமா செந்தில், செயல் தலைவர் மற்றும் செயலாளர் மாணிக்கம் , ஜகன் மெட்டல் மார்க் நிறுவனர் ஜெகநாதன், அசுவின்யா பப்ளிக் பள்ளி நிறுவனர் புவனா சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலாம் விருதுகள் 30க்கும் மேற்பட்ட விருதாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

rcs 2

மேலும், கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதை போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, நிகழ்ச்சியில் கலாம் பர்னிச்சர்ஸ் நிறுவனர் நிதிஷ் வரவேற்புரை வழங்கினார்  இரத்தினவாணி  சமுதாய வானொலி 90.8 நிலைய  இயக்குநர் மகேந்திரன் விழா நோக்க உரை வழங்கினார்

இந்நிகழ்ச்சியில் இரத்தினம்  கல்லூரி காட்சி தொடர்பியல் துறைத்தலைவர் சதீஷ் ஆனந்தன் ,தமிழ்த் துறைத் தலைவர் பரமேஸ்வரி , தமிழகநியூஸ் ஆசிரியர்  ஜெயச்சந்திரன் மற்றும் இரத்தினவாணி சமுதாய வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்  உஷா  நந்தினி  , தமிழ்த்துறை உதவி பேராசிரியர் சதீஷ்குமார் உட்பட  200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.