பொள்ளாச்சி வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தில்  நான்காவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

என்.ஐ.ஏ கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் விழாவிற்கு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் (IIHR) இயக்குநர் துசார் கன்தி பெஹெரா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.

அவர் பேசுகையில், இந்த நாள் மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கும், அதே வேளையில் ஆசிரியர்கள், நிர்வாகம் மற்றும் குடும்பத்தின் பங்களிப்பிற்குச் சான்றாகவும் விளங்குகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மேற்கோள் காட்டி, இலக்கை அடைவதில் கற்றல் மற்றும் படைப்பாற்றலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், இந்தியாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பைப் பற்றியும், வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கலைப் பற்றியும் குறிப்பிட்டார்.

விவசாயத்தில் தொழில் முனைவோருக்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் முயற்சிகளை ஆய்ந்து தேடப் பட்டதாரிகளை ஊக்குவித்தார்.

இந்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரியின் இளநிலை வேளாண்மை பட்ட படிப்பு முடித்த 320 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். மேலும் கல்லூரி அளவில் 5 தங்கம், 5 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

இந்திய டெக்ஸ்டைல் தொழிற் கூட்டமைப்பின்(CITI)பருத்திக்கான நிலைக்குழுவின் தலைவரும், சக்தி குழும நிறுவனங்களின் இயக்குநருமான தரணிபதி ராஜ்குமார், கல்லூரி முதல்வர் பிரபாகர், வாணவராயர் வேளாண்மைக் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கெம்பு செட்டி, தாளாளர் கற்பகவல்லி, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்.