ஒரு ஏக்கர் பரப்பளவில் ஸ்ரீ கணபதி மார்டின் மிக பிரம்மாண்டமான புதிய கிளை துடியலூரில் இன்று (டிசம்பர் 15) திறக்கப்பட்டது. புதிய ஷோரூமை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம். கிருஷ்ணன், சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், பேரூர் ஆதீனம் மருதாசலம் அடிகளார் ஆகியோர் திறந்து வைத்தனர். இதில், ஸ்ரீ கணபதி மார்ட் நிர்வாக இயக்குநர் கணபதி, செல்வம் ஏஜென்சிஸ் நிர்வாக இயக்குநர் நந்தகுமார், ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.