தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை(6.12.2024) சென்னையில் நடைபெறும் விழாவில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கவுள்ளதையடுத்து, கோவை, நவஇந்தியா இந்துஸ்தான் கலைக் கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிரந்தி குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், சட்டமன்ற உறுப்பினர், துணைமேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.