ராயல் கேர் மருத்துவமனை, கோவை பன்னாட்டு அரிமா சங்கம், கோவை ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் மற்றும் கோவை மாநகர காவல் துறையு இணைந்து காவல் துறையினருக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும் இலவச கல்லீரல் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாமை காவலர் மருத்துவமனை பிஆர்எஸ் வளாகத்தில் நடத்தியது.
இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் ராயல் கேர் மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன், ஸ்பின் சிட்டி அரிமா சங்கம் தலைவர் ஆனந்தன், முன்னாள் பன்னாட்டு இயக்குநர் மற்றும் அகில இந்திய லயன்ஸ் கூட்டமைப்பு தலைவருமான மதனகோபால், ஸ்பின் சிட்டி அரிமா சங்கத்தின் செயலாளர் சுந்தர்ராஜன் மற்றும் பொருளாளர் நாகமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தனர்.
இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை ராயல் கேர் மருத்துவமனையின் மருத்துவர்கள் சவுண்டப்பன் மற்றும் சந்தீப் சந்திரசேகர் ஆகியோர் இரு நாட்களுக்கு வழங்கினர்.
இது குறித்து மருத்துவமனை தலைவர் மாதேஸ்வரன் கூறுகையில், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உயரம், எடை, இரத்த அழுத்தம், இரத்தத்தில் சக்கரை அளவு, இ.சி.ஜி, பைப்ரோ ஸ்கேன், சிறப்பு கல்லீரல் மருத்துவர்கள் ஆலோசனை மற்றும் உணவு ஆலோசகரின் ஆலோசனைகள் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது” என்றார்.