இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு (FMAE) “பாரத் சோலார் வெஹிக்கிள் சேலஞ்ச் (BSVC)” போட்டியில் இந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் 6 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர்.
இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸ் கிளப்களின் கூட்டமைப்பு (FMAE) “பாரத் சோலார் வெஹிக்கிள் சேலஞ்ச் (BSVC)” சீசனை அண்மையில்நடத்தியது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 47 அணிகள் நான்கு பிரிவுகளில் போட்டியிட்டன.
இப்போட்டியில் பங்கேற்ற இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த “ஹிந்துஸ்தானி லஹுரியன்ஸ்” குழு, பொறியியல் சிறப்பை வெளிப்படுத்தி, டிசைன் வின்னர் காஸ்ட் வின்னர் ஆக்சிலரேஷன் வின்னர் டிராக்ஷன் வின்னர் ஆட்டோகிராஸ் வின்னர் ஸ்கிட் பேட்ஸ் வின்னர் விருதுகளை என ஆறு மதிப்புமிக்க விருதுகளை வென்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது.
வாகனத்தை உருவாக்குவதற்கு வழங்கிய நிதி மற்றும் ஆய்வக ஆதரவிற்கு மாணவர்கள் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்தனர். மாணவர்களின் சிறப்பான சாதனைக்கு முதல்வர் ஜெயா, டீன் சிவா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.