இந்திய மருத்துவ சங்கம் கோயம்புத்தூர் மற்றும் கோயம்புத்தூர் நுரையீரல் மருத்துவர்கள் சங்கம் இணைந்து, கோவை நகர முன் கள பணியாளர்களுக்கு இலவச நுரையீரல் பரிசோதனை முகாமை வியாழக்கிழமை (24.10.2024) புரூக்பாண்ட் சாலையில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் பிரியா கார்த்திக் பிரபு, செயலர் ராமலிங்கம் மற்றும் கோவை நுரையீரல் மருத்துவர்கள் சங்கத் தலைவர் நாகராஜன், செயலர் நந்தகோபால் மற்றும் மருத்துவர்கள் மோகன்குமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.