இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் “இந்துஸ்தான் கொலு- 2024” என்ற தலைப்பில் கொலு நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் தமிழகத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் உள்ள இறை வடிவத்தைக் காட்சிப் படுத்தி கொலுவில் வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் சிறப்பம்சமாக ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ அரங்க நாதர் மற்றும் கைலாசநாதர் கொலுவில் வீற்றிருப்பது சிறப்பம்சம்.
இந்துஸ்தான் கல்வி நிறுவன நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் “இந்துஸ்தான் கொலுவை” துவக்கி வைத்தார். மேலும், இந்துஸ்தான் கல்வி நிறுவன செயலர் பிரியா, பள்ளியின் முதல்வர் செண்பகவல்லி ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில்
பள்ளி மாணவ மாணவியர் மட்டும் அல்லாமல் பெற்றோர்கள் பொதுமக்களும் பங்கேற்றனர்.