கோவை ஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் சாலையில் அதிநவீன மருத்துவ வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஸ்கின்னிக் & ரீக்ரோ முடி மற்றும் தோல் சிகிச்சைக்கான சிறப்பு கிளினிக் திறப்பு விழா நடந்தது.

இதில், பார்க் கல்விக் குழுமத்தின் சி.இ.ஓ. அனுஷா ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கிளினிக்கைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சைக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ள அறைகளைப் பார்வையிட்டார்.

3d 3 scaled

இதுகுறித்து கிளினிக்கின் மருத்துவர்கள் கூறியதாவது: முடி மற்றும் தோல் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு அதிநவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்கும் நோக்கில் இக்கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

3b 4 scaled

முடி உதிர்தல் சிகிச்சை, முடி நடுதல், முடி அகற்றுதல், முகச்சுருக்கம் நீக்கி முகப்பொலிவை மேம்படுத்துதல், மச்சம், மரு, ஆணி போன்றவற்றை நீக்குதல், காயத் தழும்பு மற்றும் வெள்ளை படை அறுவை சிகிச்சை, சொரியாசிஸ், படர் தாமரை சிகிச்சை, தொழுநோய் சிகிச்சை என முடி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வு தரும் வகையில் சிகிச்சை வழங்கப்படும்

மேலும், ரத்தப் பரிசோதனை மற்றும் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவக் குழுவினரின் ஆலோசனையுடன் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. முடி உதிர்தல் பிரச்னைக்கு ஆக்டிக் டிப் ஹேர் ரெடக்‌ஷன், ஸ்கின் ரீபூட், லுமினோ கோல்டன் இன்ஃபியூஷன், பிளாட்டினம் லுமினோ டிரிப் உள்ளிட்ட சிகிச்சைகளும், முடி வளர்ச்சியை மேம்படுத்த பியூர் கிரவுன் ஆக்சிஜன் ரேடியன்ஸ், ஸ்கால்ப் எலிக்சிர், ரூட் ரீவைவ், ஃபாலி பூஸ்ட் உள்ளிட்ட நவீன சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

3c 3 scaled

முடி மற்றும் தோல் பிரச்னைகளுக்காக இனி துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டிய அவசியமில்லை. சர்வதேசத் தரத்திலான நவீன சிகிச்சைகள், ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் கோவையிலேயே கிடைக்கும் வகையில் இக்கிளினிக் செயல்படும். இவ்வாறு மருத்துவர்கள் தெரிவித்தனர்.

விழாவில், பிராண்ட் அம்பாசிடர் வர்ஷா பிள்ளை, மருத்துவர்கள் சித்திக், சுதர்சன், ஸ்ருதி லயா, அஃப்னா, ஸ்ரீ அகர்சன், நீஷ்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்து கொண்டனர்.