இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறையின் சார்பில், கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பிற்கான பழக்கலவை விழா நடைபெற்றது.
கோவை லீ மெரிடியன் ஹோட்டலின் செயல் சமையல் நிபுணர், டொம்னிக் சேவியர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலரும் செயலாளருமான பிரியா சதீஷ் பிரபு கௌரவ விருந்தினராகப் பங்கேற்றார்.

எஸ்.ஜி. ஜெயின் மல்டி ஸ்பெஷாலிட்டி பல் மருத்துவமனையின் அழகியல் பல் மருத்துவர் டாக்டர் ஸ்நேஹல், ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் செவிலியர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஜேனி கெம்ப், சிஐஆர்சிஓஆர் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டுத் துணை மேலாளர் மோனிகா,
ராயல் கேர் மருத்துவமனையின் உணவு மற்றும் பானங்கள் மேலாளர் கிருபானந்தம் கோவிந்தராஜ், தனம் கேட்டரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார், சமூக ஊடகப் பிரபலமான சௌந்தர்யா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் சிவசங்கர், கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, கேட்டரிங் அறிவியல் மற்றும் ஹோட்டல் மேலாண்மைத் துறையின் தலைவர் பிரேம்கண்ணா ஆகியோர் பங்கேற்றனர். பேராசிரியர்கள், மாணவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மாணவர்கள், 20 வகையான உலர் பழங்கள், கொட்டைகள் மற்றும் நறுமண மசாலாப் பொருட்கள் அடங்கிய மொத்தம் 50 கிலோ மூலப்பொருட்களைக் கொண்டு பழக்கலவை தயாரிப்பில் ஈடுபட்டனர்.
பழக்கலவையானது சுகாதாரமான சூழலில், 25 நாட்கள் ஊறவைக்கப்படும். இதன் மூலம் பழங்கள், கொட்டைகள் மற்றும் மசாலாப் பொருட்களின் சுவையும் நறுமணமும் ஒன்றிணைந்து, பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக்கிற்கே உரிய தனித்துவமான சுவையைப் பெறும்.

மாணவர்களால் தயாரிக்கப்படும் கிறிஸ்துமஸ் கேக்குகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக ஹோட்டல்கள், கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் ஆதரவற்ற, நலிவடைந்த மக்களுக்கு வழங்கப்படவுள்ளன.
